×

போலி ஆவணம் தயாரித்து கார் விற்றவருக்கு வலை

பெரம்பூர்: அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் தனியார் வங்கி உள்ளது. இதில் சிரேஷ்குமார் (38) என்பவர் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த வங்கியில் கடந்த 2019ம் ஆண்டு, கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், ரூ.3.44 லட்சம் கார் லோன் வாங்கியுள்ளார். ஆனால், அவர் கடனை சரிவர திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், அந்த காரை பறிமுதல் செய்ய வங்கி நிர்வாகம் முயற்சி செய்துள்ளது.  இந்நிலையில் சுரேஷ், வங்கியில் வாங்கிய கார் லோனை திருப்பி செலுத்தியதாக போலி ஆவணம் தயாரித்து, அந்த காரை மற்றொருவருக்கு விற்பனை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த வங்கி மேலாளர், சென்னை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த 10வது குற்றவியல் நீதிபதி, நடவடிக்கை எடுக்க கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தலைமறைவான சுரேஷை தேடி வருகின்றனர்.

The post போலி ஆவணம் தயாரித்து கார் விற்றவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Perambur ,Nelson Manickam Road, Nitakarai ,Sireshkumar ,Dinakaran ,
× RELATED குழந்தை இல்லை என கேலி செய்ததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை