×

மோசடி வழக்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கைது

திருவனந்தபுரம்: மோசடி வழக்கில் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரனை குற்றப்பிரிவு போலீசார் நேற்று 7 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய பின் கைது செய்து அவரை ஜாமீனில் விடுவித்தனர். கேரளாவில் போலி புராதனப் பொருட்களை விற்பனை செய்து பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் மோன்சன் என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தன்னிடம் பணிபுரிந்த ஒரு பெண் ஊழியரின் 17 வயது மகளை பலாத்காரம் செய்ததாகவும் இவர் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் இவருக்கு சமீபத்தில் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மோன்சனுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதாக கூறி கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 23ம் தேதி (நேற்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு சுதாகரனுக்கு குற்றப்பிரிவு போலீஸ் நோட்டீஸ் கொடுத்தது. இந்நிலையில் முன் ஜாமீன் கோரி சுதாகரன் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், சுதாகரனுக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மேலும் 23ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சுதாகரன் நேற்று கொச்சியிலுள்ள குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்குப் பின் அவரை கைது செய்த போலீசார் பின்னர் அவரை ஜாமீனில் விடுவித்தனர். சுதாகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்றும், நாளையும் கேரளா முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரசார் அறிவித்துள்ளனர்.

The post மோசடி வழக்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala State Congress ,President Sudhakaran ,Thiruvananthapuram ,President ,Sudhakaran ,Dinakaran ,
× RELATED கேரளாவில் மனித உடல் உறுப்புகளை கடத்தி...