×

மதுராந்தகம் ஒன்றியத்தில் இரண்டு அரசு பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம்: எம்எல்ஏ அடிக்கல்

மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்தில் 2 அரசு பள்ளி கட்டிடங்களுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட, அத்தொகுதியின் எம்எல்ஏ மரகதம் குமரவேல் அடிக்கல் நாட்டினார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழமத்தூர், நெல்லி ஆகிய இரு கிராமங்களில் அரசு பள்ளிகள் உள்ளன. இங்கு, போதிய வகுப்பறைகள் இல்லாமல் நெருக்கடியான சூழ்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் படித்து வருவதாக பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேலிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இந்த கோரிக்கை மனு அடிப்படையில், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு பள்ளிக்கூடத்திற்கு ரூ.23.40 லட்சம் என, இரு பள்ளி கட்டிடங்களுக்கும் ரூ.46.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா அந்தந்த பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவர் கீதா கார்த்திகேயன், துணை தலைவர் குமரவேல், ஒன்றிய செயலாளர்கள் அப்பாதுரை, கார்த்திகேயன், ஒன்றிய குழு துணை தலைவர் குமரவேல் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post மதுராந்தகம் ஒன்றியத்தில் இரண்டு அரசு பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம்: எம்எல்ஏ அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Madurathangam union ,MLA ,Madhurandakam ,Marakatham Kumaravel ,Madurandakam ,union ,Dinakaran ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்