×

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு கடன் சிறப்பு முகாம்

நெல்லை, ஜூன் 24: சிறுபான்மையினர் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெறுவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இதற்கான முகாம் நடக்கும் நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன் மற்றும் கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க ஏதுவாக கடன் வழங்கும் முகாம் (லோன் மேளா) காலை 11 மணி முதல் 1 மணி வரை நெல்லை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தலைமை அலுவலகம், வண்ணார்பேட்டையில் நாளை மறுதினமும் (26ம் தேதி), அதன் கிளை வங்கிகளான மேலப்பாளையத்தில் வரும் 28ம் தேதி, நாங்குநேரியில் 30ம் தேதி, மானூரில் ஜூலை 4ம் தேதி, வள்ளியூரில் ஜூலை 6ம் தேதி, அம்பையில் ஜூலை 11ம் தேதியும் நடக்கிறது. விண்ணப்பதாரர்கள் கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது, செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு கடன் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Economic Development Loan Special Camp ,Nellai ,Tamil Nadu Minority Economic Development Corporation.… ,Economic Development Loan Special Camp for Minorities ,Dinakaran ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...