×

ஓடும் பைக்கில் ‘ரொமான்ஸ்’ இறுக்கி அணைச்சு ஒரு உம்மா… அபராதம் போட்ட போலீஸ்

உத்தர பிரதேசம் மாநிலம், காசியாபாத் பகுதியில் ஒரு பைக்கில் வாலிபரின் மடியில் ஒரு இளம்பெண் அமர்ந்து கொண்டு செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பின்னால் காரில் வந்தவரின் வீடியோ எடுத்து உள்ளார். அதில், பெட்ரோல் டேங்கின் மீது அமர்ந்த இளம்பெண், வாலிபரின் மடியில் ஏறி, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ‘ரொமான்ஸ்’ செய்வது போன்ற காட்சிகள் இருந்தன. இந்த வீடியோவில் உள்ளது யார் என்று பைக் எண்ணை வைத்து காசியாபாத் போலீசார் விசாரித்தனர். பின்னர், அந்த பைக் உரிமையாளரை வரவழைத்து அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.

The post ஓடும் பைக்கில் ‘ரொமான்ஸ்’ இறுக்கி அணைச்சு ஒரு உம்மா… அபராதம் போட்ட போலீஸ் appeared first on Dinakaran.

Tags : Ghaziabad, Uttar Pradesh ,
× RELATED போலி வீடியோ வெளியிட்ட விவகாரம்;...