×

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா: பாதுகாப்பு பணியில் 550 போலீசார்

வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்புப்பணியில் 550 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மூலவர் இல்லாத நிலை கடந்த 1981 மார்ச் 16ம்தேதி முடிவுக்கு வந்தது. 1982ம் ஆண்டு முறையான கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு அப்போது முதல் மக்களின் வழிபாட்டில் இருந்து வருகிறது. ஜலகண்டேஸ்வரர் கோயிலில் அன்றாட பூஜைகள், கும்பாபிஷேகம், திருவிழாக்கள் உட்பட அனைத்தையும் ஜலகண்டேஸ்வரர் கோயில் தரும ஸ்தாபனம் நடத்தி வருகிறது. கோயிலுக்கு ஏற்கனவே தங்கத்தேர், கொடிமரம் என அனைத்தும் தற்போது முறையாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இக்கோயிலுக்கு ₹5 கோடியில் தனியார் நன்கொடையில் 25 அடி உயர தங்கத்தேர் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொடிமரத்துக்கும் தங்கத்தகடுகள் பதிக்கப்பட்டுள்ளன. தங்கத்தேர் பிரதிஷ்டை மற்றும் கோயிலின் 4வது மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (25ம் தேதி) காலை 9.30 மணி முதல் 11 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்காக நேற்று முன்தினம் (21ம் தேதி) விக்னேஷ்வர பூஜையுடன், சிறப்பு ஹோமங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் மகா கும்பாபிஷேக பெருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக வேலூர் எஸ்பி மணிவண்ணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

இதையடுத்து எஸ்பி மணிவண்ணன் தலைமையில் 2 ஏடிஎஸ்பிக்கள், 5 டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், போலீசார் என 550 பேர் பாதுகாப்புப்பணியில் நாளை மாலை முதல் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதுதவிர சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்புப்பணியில் ஈடுபடுகின்றனர். பக்தர்கள் கடும் சோதனைக்கு பிறகே கோட்டை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா: பாதுகாப்பு பணியில் 550 போலீசார் appeared first on Dinakaran.

Tags : Vellore Fort ,Jalakandeswarar ,Temple ,Kumbabhishek ,Vellore ,Jalakandeswarar Temple ,Fort Jalakandeswarar… ,
× RELATED காட்பாடியில் ₹365 கோடி நிதியில் ரயில்...