×

அடுத்த கூட்டம் சிம்லாவில்… பாஜகவை வீழ்த்துவதே இலக்கு: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி

பாட்னா: எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 10 அல்லது 12ம் தேதி சிம்லாவில் நடைபெறும் என காங். தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவது தொடர்பாக 15 எதிர்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று பாட்னாவில் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த புதிய வியூகம் வகுக்கப்பட்டது.

கூட்டத்துக்கு பின் செந்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே;
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை உள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். 2024 லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான பாதையை வகுப்பதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நாடாளுமன்ற தேர்தலுக்கு பொதுவான செயல்திட்டத்தை வகுத்து வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலையொட்டி பொது தேர்தல் அறிக்கையை தயார் செய்வது குறித்து ஆலோசித்தோம்.

அடுத்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத் தேர்தல் அறிக்கை குறித்து முடிவெடுப்போம். நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் இணைந்து சந்திப்பது தொடர்பான பொதுக் கருத்து அடுத்த மாதம் இறுதி செய்யப்படும். எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனை கூட்டம் ஜூலை 10 அல்லது 12ம் தேதி சிம்லாவில் நடைபெறும். பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதே எங்களின் ஒட்டுமொத்த இலக்கு இவ்வாறு கூறினார்.

The post அடுத்த கூட்டம் சிம்லாவில்… பாஜகவை வீழ்த்துவதே இலக்கு: மல்லிகார்ஜூன கார்கே பேட்டி appeared first on Dinakaran.

Tags : Shimla ,Bajaka ,Malligarjun Karke ,Patna ,Bajak ,Mallikarjun Karke ,Dinakaran ,
× RELATED பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் மீதான பாலியல்...