×

லஞ்சம் பெற்றுக்கொண்டு வேலை!: 4 உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்து டிசிஎஸ் நிறுவனம் அதிரடி..!!

சென்னை: லஞ்சம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கிய புகாரில் 4 உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ள டிசிஎஸ் நிறுவனம் 3 பணியாளர் நியமன நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்தியாவின் பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான TATA CONSULTANCY SERVICES வேலை வாய்ப்புக்காக லஞ்சம் வாங்கும் ஊழலில் சிக்கி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பணி நியமனங்களின் போது வள மேலாண்மை குழுவின் தலைவர் ஈ.எஸ்.சக்கரவர்த்தி லஞ்சம் பெறுவதாக டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிகளுக்கு ஊழியர் ஒருவர் புகார் கடிதம் எழுதியதாக தெரிகிறது.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட 3 பேர் கொண்ட உயர்மட்ட குழு விசாரணையில் அவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து ஆள்சேர்ப்பு துறை தலைவரை விடுப்பில் அனுப்பிய டிசிஎஸ், வள மேலாண்மை குழுவில் இருந்து 4 அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளது. இவர்கள் விண்ணப்பதாரர்கள் மற்றும் தனியார் ஆள்சேர்ப்பு நிறுவனங்களிடம் இருந்து பல ஆண்டுகளாக கையூட்டு பெற்று வந்துள்ளனர்.

மேலும் நிறுவனத்தின் ஊழியர் நியமனத்தின் போது டி.சி.எஸ். அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்த 3 பணியாளர் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் டிசிஎஸ் நிறுவனம் 3 லட்சம் பேரை பணியமர்த்தியுள்ள நிலையில், ஆள்சேர்ப்பு மோசடியில் ஈடுபட்டவர்கள் கமிஷன் மூலம் குறைந்தது 100 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

The post லஞ்சம் பெற்றுக்கொண்டு வேலை!: 4 உயர் அதிகாரிகளை பணிநீக்கம் செய்து டிசிஎஸ் நிறுவனம் அதிரடி..!! appeared first on Dinakaran.

Tags : TCS Institute ,Chennai ,TCS ,TCS Institute Action ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?