×

கும்மிடிப்பூண்டியில் யோகா சாம்பியன் வென்ற பள்ளி மாணவனுக்கு விருது

கும்மிடிப்பூண்டி: சர்வதேச யோகா திருவிழா மற்றும் மாநில அளவிலான யோகா போட்டி நேற்று காஞ்சிபுரம் அருகே மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்பயிற்சி கல்வி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. வயதுவாரியாக நடைபெற்ற இப்போட்டியில், 3 முதல் 5 வயது வரையிலான ஆண்கள் பிரிவில், கும்மிடிப்பூண்டி வினாயோகா பயிற்சி மையத்தை சேர்ந்த பள்ளி மாணவன் கே.வருண் 3வது பரிசையும், பெண்கள் பிரிவில் நளினி முதல் பரிசையும், கிருத்திகா 2வது பரிசையும், 6 முதல் 8 வயது வரையிலான பிரிவில் ராம் விஷ்வா முதல் பரிசு வென்றார். அதேபோல், 9 முதல் 12 வயது வரையிலான பிரிவில் துஜன் 2வது பரிசை வென்றார்.

13 முதல் 17 வயது வரையிலான பிரிவில் கௌதம் 3வது பரிசை வென்றார். சிறப்பு பிரிவில் 9 முதல் 12 வயது பிரிவில் மாணவன் சீத்தேஷ் முதல் பரிசையும் நீலேஷ் 3ம் பரிசையும் வென்றுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற முதல் மாபெரும் யோகா போட்டியில், கும்மிடிப்பூண்டி வினாயோகா பயிற்சி மையத்தை சேர்ந்த பள்ளி மாணவன் ஹரிஷ் சாம்பியன் ஆப் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். அந்த மாணவனுக்கு நேற்று மாலை பயிற்சி மைய வளாகத்தில் பிரைட் ஆப் தமிழ்நாடு என்ற கவுரவ விருதை இப்பயிற்சி மையத்தின் நிறுவனர் காளத்தீஸ்வரன் வழங்கினார். வெற்றி பெற்ற பிற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

The post கும்மிடிப்பூண்டியில் யோகா சாம்பியன் வென்ற பள்ளி மாணவனுக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Gummaipundi ,Kummidippundi ,International Yoga Festival ,Malkottaeur ,Kanchipuram ,Gummedipundi ,
× RELATED உயரழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுது...