×

தொகுதிகளை ஏ.பி.சி.யாக பிரித்து வெற்றிவாய்ப்புள்ள இடங்களில் பா.ஜ. போட்டியிடும்: தேர்தல் பார்வையாளர் சி.டி. ரவி அறிவிப்பு

நெல்லை: ‘‘தமிழகத்தில் ெவற்றி வாய்ப்பு, பலப்படுத்துதல், பலவீனமான தொகுதிகள் என ஏ.பி.சி. பிரித்து வெற்றியுள்ள இடங்களில் பா.ஜ. போட்டியிடும்’’ என்று தமிழக தேர்தல் பார்வையாளருமான சி.டி. ரவி தெரிவித்தார். நெல்லையில் நடந்த சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ. தேசிய பொதுச் செயலாளரும், தமிழக தேர்தல் பார்வையாளருமான சி.டி. ரவி அளித்த பேட்டி: தமிழகத்தில்  சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும்  வகையில் பூத் கமிட்டி, சக்தி கேந்திர பொறுப்பாளர்கள்  கூட்டத்தை நடத்தி வருகிறோம். மேலும், ஜனவரி 30, 31ல் தமிழகத்திற்கு பா.ஜ. தேசிய தலைவர்  நட்டா வருகிறார். தமிழகம், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி  பெறும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. பா.ஜ.வுக்கு சாதகமான சட்டசபை தொகுதிகள் ஏ,பி,சி என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி  பெறும் தொகுதி ‘ஏ’வாகவும்,  பலப்படுத்த வேண்டிய தொகுதிகள் ‘பி’ எனவும்,  பலவீனமான தொகுதிகள் ‘சி’யாகவும்  கண்டறியப்பட்டு, பா.ஜ. தேர்தல் பணியாற்றி  வருகிறது. இதில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளை கண்டறிந்து  தேர்தலில் பா.ஜ. போட்டியிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின்போது மாநில தலைவர் முருகன், துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் உடனிருந்தார்….

The post தொகுதிகளை ஏ.பி.சி.யாக பிரித்து வெற்றிவாய்ப்புள்ள இடங்களில் பா.ஜ. போட்டியிடும்: தேர்தல் பார்வையாளர் சி.டி. ரவி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : BJP ,APC ,Election Observer ,C.T. Ravi ,Nellie ,ABC ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...