×

கீழக்கரை மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க காத்திருக்கும் மக்கள்: மின் இணைப்பு வழங்க கோரிக்கை

 

கீழக்கரை, ஜூன் 23: கீழக்கரை அரசு மருத்துவமனையில் புதிய எக்ஸ்ரே மிஷின் வைக்கப்பட்டும் எக்ஸ்ரே எடுப்பதற்கு நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் 600க்கும் மேற்பட்ட உள்,வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்களில் தினமும் சுமார் 25 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய எக்ஸ்ரே மிஷினுக்கு மின் இணைப்பு இல்லாததால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் ஜெனரேட்டர் போட்டு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் செயலாளர் செய்யது இப்ராஹிம் கூறுகையில், ஏற்கனவே இருந்த எக்ஸ்ரே மிஷினுக்காக கடந்த 40 வருடங்களுக்கு முன் போடப்பட்ட மின் வயர்கள் புதிய மெஷினில் இணைக்கப்பட்ட போது மின் கசிவு ஏற்பட்டு அனைத்து வயர்களும் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது காலை 8 மணிக்கு வரும் நோயாளிகள் எக்ஸ்ரே எடுப்பதற்கு மதியம் 12 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. காரணம் 11 மணிக்கு தான் ஜெனரேட்டர் போடப்பட்டு 12 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு மட்டும் எக்ஸ்ரே எடுக்கப்படுகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இது குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post கீழக்கரை மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க காத்திருக்கும் மக்கள்: மின் இணைப்பு வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Lower Bank ,Hospital ,Geezakarai ,Geezakarai Government Hospital ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...