×

மீன்பிடி வலை தீவைத்து எரிப்பு

 

தொண்டி, ஜூன் 23: நம்புதாளையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி வலையை எரித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த மீனவர் முத்து(50). இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலையை தனது படகு அருகே கடற்கரையில் வைத்து விட்டு வந்துள்ளார். மீண்டும் அதிகாலை மீன் பிடிப்பதற்காக சென்று பார்த்த போது வலையை மர்ம நபர் எரித்து சென்றுள்ளது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த முத்து தொண்டி போலீசில் புகார் தெரிவித்தார். இதனடிப்படையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மீன்பிடி வலை எரிப்பு சம்பவம் மீனவர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post மீன்பிடி வலை தீவைத்து எரிப்பு appeared first on Dinakaran.

Tags : Thondi ,Nambuthalai ,Dinakaran ,
× RELATED விதிமீறிய பயணங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து