×

பொதுவுடைமை, பொது அறிவு, இயற்கை மருத்துவம் தந்த வள்ளலாரை சனாதனத்திற்கு இழுப்பது ஆளுநருடைய அறியாமையை காட்டுகிறது: வேலூரில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

வேலூர்: பொதுவுடைமை, பொது அறிவு, இயற்கை மருத்துவம் தந்த வள்ளலாரை சனாதனத்திற்கு இழுப்பது ஆளுநருடைய அறியாமையை காட்டுகிறது என்று வேலூரில் அமைச்சர் சேகர்பாபு கூறினார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேலூர் மற்றும் திருவண்ணாமலை மண்டலங்களை சேர்ந்த வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, சீராய்வுக்கூட்டம் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்தது.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி: சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறி உள்ளார். ஆளுநரின் பார்வைக்கு அவ்வாறு தெரிகிறது. இந்த நாட்டிற்கு பொதுவுடைமையையும், பொது அறிவையும் தந்தது மட்டுமல்லாமல் இயற்கை மருத்துவத்தையும் தந்த மாமனிதர் வள்ளலார். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர் வள்ளலார். அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்று கூறிய வள்ளலாரை சனாதனத்திற்கு இழுப்பது ஆளுநருடைய அறியாமையை காட்டுகிறது. வரலாற்றிலேயே இதுவரை இந்து சமய அறநிலையத்துறையில் 38 மாவட்டங்களுக்கும் அறங்காவலர்களை நியமித்தது இப்போது தான். முதல் முறையாக உச்ச நீதிமன்றமே அறங்காவலர் குழு நியமனம் சிறப்பாக நடைபெற்றுள்ளது என பாராட்டியுள்ளது. இந்த ஆட்சி வந்த உடன் 1,660 கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வேலூர் கோட்டையிலுள்ள ஜலகண்டேஸ்வரர் கோயில் மத்திய அரசின் தொல்பொருள்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .

The post பொதுவுடைமை, பொது அறிவு, இயற்கை மருத்துவம் தந்த வள்ளலாரை சனாதனத்திற்கு இழுப்பது ஆளுநருடைய அறியாமையை காட்டுகிறது: வேலூரில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Minister ,SegarBabu ,Vellore ,Tandana Vallalar ,Sasana ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...