×

கேரள முதல்வருக்கு உடல் நலக்குறைவு

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய 5 நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்கா, கியூபா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார். 12 நாள் சுற்றுப்பயணத்திற்கு பின்னர் கடந்த இரு தினங்களுக்கு முன் அவர் திருவனந்தபுரம் திரும்பினார். ஊர் திரும்பிய பின் அவருக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 1 வாரம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் பினராயி விஜயன் தன்னுடைய 5 நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்து வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்

The post கேரள முதல்வருக்கு உடல் நலக்குறைவு appeared first on Dinakaran.

Tags : Kerala CM ,Thiruvananthapuram ,Kerala ,Chief Minister ,Binarayi Vijayan ,CM ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...