×

ரூ.3 லட்சம் கடனுக்கு நிலத்தை எழுதி கேட்பதாக கூறி கமிஷனர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி: போலீசார் மீட்டு விசாரணை

கூடுவாஞ்சேரி: வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று பெண் ஒருவர் கையில் பையுடன் வந்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத நிலையில் அந்த பெண், 3வது நுழைவாயில் முன்பு நின்று கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், உடனே அந்த பெண்ணை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி, அவரை மீட்டு, வேப்பேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த வரலட்சுமி (53) என்பது தெரிந்தது. இவரது கணவர் இறந்து விட்டதால், பண தேவைக்காக ஒருவரிடம் ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்திற்கு வட்டியுடன் தற்போது ரூ.10 லட்சம் தரவேண்டும் என்று பணம் கொடுத்த நபர் மிரட்டுவதாகவும், இல்லையேன்றால் பழவந்தாங்கல் பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் நிலத்தை எழுதி கொடுக்க வேண்டும் என்று மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் வரலட்சுமி புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது புகாரின் மீது முறையாக விசாரணை நடத்தவில்லை என கூறி கமிஷனர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து தற்கொலைக்கு முயன்ற வரலட்சுமியிடம் போலீசார் புகார் மனுவை பெற்று கொண்டனர். மேலும், அவர் உடல் அளவில் மிகவும் பலவினமாக இருந்ததால் போலீசார் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

The post ரூ.3 லட்சம் கடனுக்கு நிலத்தை எழுதி கேட்பதாக கூறி கமிஷனர் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி: போலீசார் மீட்டு விசாரணை appeared first on Dinakaran.

Tags : Guduvanchery ,Chennai Police ,Vepperi ,Dinakaran ,
× RELATED அரசு, தனியார் பேருந்துகளில்...