×

குற்றாலம் சீசனில் மாற்றம்; ஐந்தருவி-மெயின் அருவியில் குளிக்க அனுமதி: இதமான காற்று வீசுகிறது

தென்காசி: குற்றாலத்தில் நேற்று இதமான சூழல் நிலவியது. பகல் முழுவதும் வெயில் காணப்படவில்லை மதியம் நல்ல சாரல் பெய்தது. இதனை தொடர்ந்து மாலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். இந்நிலையில் இன்று (வியாழன்) காலை வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.இதனிடையே நேற்று இதமான சூழல் காணப்பட்ட நிலையில் இன்று காலை சற்று வெயில் காணப்பட்டது. சாரல் இல்லை. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் மட்டும் ஓரளவு தண்ணீர் விழுகிறது.

மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. சாரல் இல்லாதபோதும் இதமான காற்று வீசுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை ஓரளவு நன்றாக உள்ளது. நேற்று மாலை விழுந்த தண்ணீருடன் ஒப்பிடும்போது இன்று காலை தண்ணீர் வரத்து சற்று குறைந்து காணப்படுகிறது. இன்றும் நாளையும் சாரல் நீடித்தால் மட்டுமே விடுமுறை தினங்களில் தண்ணீர் இருக்கும். சாரல் இல்லாத பட்சத்தில் விடுமுறை தினங்களில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விடும்.

The post குற்றாலம் சீசனில் மாற்றம்; ஐந்தருவி-மெயின் அருவியில் குளிக்க அனுமதி: இதமான காற்று வீசுகிறது appeared first on Dinakaran.

Tags : Dhengasi ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...