×

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு; சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆஜர்

சென்னை: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

கடந்த எப்ரல் 6-ம் தேதி தம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யபட்டது. இது தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நாயினார் நாகேந்திரனின் ஓட்டல் ஊழியர் வேலை பார்க்க கூடியவர்கள் மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணையானது தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சுமார் 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நெல்லை பாஜக வேட்பாளர் நாயினார் நாகேந்திரனின் நெருங்கிய உறவினரான முருகன் மற்றும் அவரிடம் பணியாற்றக்கூடிய ஜெய்சங்கர், ஆசைதம்பி, ஆகியோரையும் வரவழைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், நாயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பாஜக தொழில்பிரிவு தலைவர் கோவரதன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிசிஐடி போலீசார் அறிவுறுத்தியிருந்தனர். ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு ஆஜராவதாக 4 பேர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று கேசவ விநாயகம் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

The post ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு; சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : BJP State Organization ,General Secretary ,Kesava Vinayakam ,CBCIT ,Egmore, Chennai ,Chennai ,Nellai Express ,Tambaram ,Kesava Vinayagam ,Dinakaran ,
× RELATED விக்கிரவாண்டி இடைத்தேர்தலை தேமுதிக...