×

தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சென்னை: தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளார்.

மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வதும், துப்பாக்கி சூடு நடத்துவதும், தாக்குவதும், வலைகள், உபகரணங்களை, படகுகளை பறிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 22 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் 4 விசை படகுகளையும் பறிமுதல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது;

“தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினருக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழக மீனவர்களை உடனடியாக மீட்பதற்கான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை கேட்டுக் கொள்வதுடன், மீனவர்கள் விடுவிக்கப்படும் வரை அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான நிவாரண உதவிகளை முழுமையாக வழங்கும்படியும் வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

The post தமிழக மீனவர்கள் 22 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : edapadi paranisamy ,lankan navy ,Chennai ,Edapadi Palanisamy ,Sri Lankan Navy ,Edapadi Palanisami ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை