×

மொராக்கோவில் சோகம்: கடலில் படகு மூழ்கி 36 பேர் பரிதாப பலி

மொராக்கோ: மொராக்கோ கடலோர பகுதியில் 60 பேரை ஏற்றி கொண்டு ஒரு கப்பல் புறப்பட்டது. ஸ்பெயின் எல்லைக்குட்பட்ட பகுதியில் சென்றபோது திடீரென கடலில் மூழ்கியது. இதில் படகில் இருந்த அனைவரும் நடுக்கடலில் மூழ்கி தத்தளித்தனர். சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக உதவி கோரி போராடினர். இந்த தகவலை அறிந்ததும் ஸ்பெயின் கடல்சார் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மூழ்கிய படகு இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஒரு விமானமும் அனுப்பி வைக்கப்பட்டது.

அப்போது, ஆப்பிரிக்க கடற்கரையில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் (44 மைல்) தொலைவிலும், கேனரி தீவுகளுக்கு தெற்கே 160 கிலோமீட்டர் தொலைவிலும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கடலில் மூழ்கி 30க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 6 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 30 பேரை தேடும் பணிநடக்கிறது. இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post மொராக்கோவில் சோகம்: கடலில் படகு மூழ்கி 36 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Moroccan ,Morocco ,Spain ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ருப்லேவ் சாம்பியன்