×

மாதவரம், மூலக்கடை பகுதியில் ஜிஎன்டி. சாலையில் பள்ளங்கள்

திருவொற்றியூர்: சென்னை மாதவரம், மூலக்கடையில் இருந்து ஜிஎன்டி. சாலை வழியாக புழல், மஞ்சம்பாக்கம்,ரெட்டேரி ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவருகின்றன. இங்குள்ள சென்னை மாநகர பேருந்து பணிமனை அருகில் ஜிஎன்டி சாலை குண்டும் குழியுமாக கிடப்பதால் இவ்வழியாக வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பைக்குகளில் செல்கின்றவர்கள், பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து விடுகின்றனர். மேலும் சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக சாலை மேலும் மோசம் அடைந்துள்ளது. இதனால் பழுதான சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு மாதவரம் ரவுண்டானாவில் இருந்து மூலக்கடைக்கு பைக்கில் சென்ற தம்பதி, சாலையில் பள்ள பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்தனர். இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்றுவருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். எனவே, மேற்கண்ட சாலையை விரைந்து சீரமைக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பொதுமக்கள் கூறுகையில், ‘’குடிநீர் வழங்கல் வாரியம் மூலம் குழாய் அமைக்க சாலையில் பள்ளம் தோண்டினர். ஆனால் குழாய்கள் பதிக்கப்பட்ட பிறகு மீண்டும் சாலை அமைக்காமல் விட்டுவிட்டனர். இதனால் ஏற்பட்டுள்ள பள்ளம், சாலை உடைந்து பள்ளம் கிடப்பதால் வாகனங்களை இயக்க முடியவில்லை. எனவே, ஜிஎன்டி சாலையை விரைந்து சீரமைத்து தரவேண்டும்’ என்றனர்.

The post மாதவரம், மூலக்கடை பகுதியில் ஜிஎன்டி. சாலையில் பள்ளங்கள் appeared first on Dinakaran.

Tags : Madhavaram, GND ,Molokadai ,Moolakadai, Chennai ,Puzhal ,Manjambakkam ,Retteri ,Moolakadai ,
× RELATED காக்கி சீருடை அணிந்து வாகன சோதனை;...