×

மும்பை கப்பல் கட்டும் தளத்தில் 281 அப்ரன்டிஸ்கள்

மும்பை கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள 281 அப்ரன்டிஸ்கள் இடங்களுக்கு ஐடிஐ படித்த ஆண்கள், பெண்கள் மற்றும் ஐடிஐ படிக்காத 8 மற்றும் 10ம் வகுப்பு முடித்த ஆண்கள், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Apprenticeship Training. மொத்த இடங்கள்- 281.

i) ஓராண்டு பயிற்சி டிரேடுகள்:
1. Fitter: 42 இடங்கள் (பொது-24, ஒபிசி-8, எஸ்சி-4, எஸ்டி-4, மாற்றுத்திறனாளி-1, முன்னாள் ராணுவத்தினர்-1)
2. Mason (BC): 8 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1).
3. I & CTSM: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)
4. Electrician: 38 இடங்கள் (பொது-22, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-3, மாற்றுத்திறனாளி-1, முன்னாள் ராணுவத்தினர்- 1)
5. Electronics Mechanic: 24 இடங்கள் (பொது-13, ஒபிசி-5, எஸ்சி-2, எஸ்டி-2, மாற்றுத்திறனாளி-1, முன்னாள் ராணுவத்தினர்-1)
6. Electro plater: 1 இடம் (பொது).
7. Foundry Man: 1 இடம் (பொது).
8. Mechanic (Diesel): 32 இடங்கள் (பொது-18, ஒபிசி-6, எஸ்சி-3, எஸ்டி-3, மாற்றுத்திறனாளி-1, முன்னாள் ராணுவத்தினர்-1)
9. Instrument Mechanic: 7 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1)
10. Mechanic Machine Tool Maintenance: 12 இடங்கள் (பொது-8, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1,).
11. Machinist: 12 இடங்கள் (பொது-8, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1).
12. Painter (G): 9 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1).
13. Pattern Maker: 2 இடங்கள் (பொது)
14. Mechanic Ref. Ac: 7 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1)
15. Sheet Metal Worker: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)
16. Pipe Fitter: 12 இடங்கள் (பொது-8, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1)
17. ShipWright (Wood)-Carpenter: 17 இடங்கள் (பொது-8, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-2, மாற்றுத்திறனாளி-1, முன்னாள் ராணுவத்தினர்-1)
18. Tailor (G): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1)
19. Welder (G & E): 19 இடங்கள் (பொது-9, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-2, மாற்றுத்திறனாளி-1, முன்னாள் ராணுவத்தினர்-1)
ii) இரண்டாண்டு பயிற்சி டிரேடுகள்
20. Rigger: (Fresher, 8th Pass): 12 இடங்கள் (பொது-8, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1)
21. Forger & Heat Treater: (Fresher, 10th Std.,Pass): 1 இடம் (பொது)
22. Shipwright (STEEL): 16 இடங்கள் (பொது-10, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1)

வயது: 27.06.23 அன்று 14 முதல் 21க்குள் (அதாவது 2002ம் ஆண்டு நவ.21க்கும், 2009 நவ.21க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்)

தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 65% மதிப்பெண்களுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ தேர்ச்சி. என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.Rigger டிரேடுக்கு ஐடிஐ இல்லாமல் 8ம் வகுப்பு தேர்ச்சியும், Forger & Heat Treater டிரேடுக்கு ஐடிஐ இல்லாமல் 10ம் வகுப்பு தேர்ச்சியும் போதுமானது.

உடற்தகுதி: உயரம்- 150 செ.மீ., எடை: 45 கிலோ இருக்க வேண்டும். ஆண்களுக்கு மார்பளவு 5 செ.மீ விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும். பார்வைத் திறன் 6/6 முதல் 6/9 (கண்ணாடியுடன்) வரை இருக்க வேண்டும்.

உதவித் தொகை: ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலாம் ஆண்டில் ₹7 ஆயிரமும், Fresher களுக்கு ₹6 ஆயிரமும், இரண்டாம் ஆண்டில் 10 சதவீதம் அதிகரித்தும் வழங்கப்படும்.எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

https://apprenticedas.recttindia.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.6.2023.

The post மும்பை கப்பல் கட்டும் தளத்தில் 281 அப்ரன்டிஸ்கள் appeared first on Dinakaran.

Tags : Mumbai Shipyard ,Mumbai ,Shipyard ,ITI ,ITI… ,Dinakaran ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்