×

தாளவாடி மலைப்பகுதியில் கனமழை

 

சத்தியமங்கலம், ஜூன் 22: தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை தாளவாடி அருகே உள்ள மல்லன்குழி, மெட்டல்வாடி, அருளவாடி, மரியபுரம், திகினாரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டித்தீர்த்தது. மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மல்லன்குழி பகுதியில் உள்ள பள்ளங்கள் மற்றும் நீரோடைகளில் செந்நிற மழை நீர் கரைபுரண்டு ஓடியது. கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தாளவாடி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் மலை கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழையின் காரணமாக கிணறுகள் மற்றும் ஆழ் குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

The post தாளவாடி மலைப்பகுதியில் கனமழை appeared first on Dinakaran.

Tags : Talavadi ,Sathyamangalam ,Talawadi ,Dinakaran ,
× RELATED தாளவாடி மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்த புள்ளி மான்