பாலக்காடு, ஜூன் 22: கேரள மாநிலம் குருவாயூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 44 வளர்ப்பு யானைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான குடிநீர் பிளான்ட் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதனை தேவஸ்தான சேர்மன் விஜயன் திறந்து வைத்து யானைகளுக்கு குடிநீர் குழாய்கள் மூலமாக வழங்கினார். நிகழ்ச்சியில் தேவஸ்தான நிர்வாகி விநயன், பிளான்ட் உபயம் செய்த வக்கீல் கிட்டுநாயார், அமைப்பாளர் ஸ்ரீனிவாசன், மேலாளர் மாயாதேவி, பிஆர்ஓ, விமல், கால்நடை மருத்துவர் சாருஜித் நாராயணன் உட்பட தேவஸ்தான ஊழியர்களும் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
The post குருவாயூர் தேவஸ்தான வளர்ப்பு யானைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு appeared first on Dinakaran.
