×

மதகுபட்டியில் நாளை மின்தடை

 

சிவகங்கை, ஜூன் 22: மதகுபட்டியில் நாளை(ஜூன்.23) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிவகங்கை மின் பகிர்மான செயற் பொறியாளர் முருகையன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மதகுபட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி மதகுபட்டி, தச்சம்பட்டி, ராமலிங்கபுரம், காடனேரி, அம்மன்பட்டி, ஒக்கூர், காளையார்மங்கலம், அய்யம்பட்டி, கொழுக்கட்டைப்பட்டி, அண்ணாநகர், ஒ.புதூர், நாலுகோட்டை, கருங்காபட்டி மற்றும் சுற்றியுள்ள மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் நாளை காலை 9 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மதகுபட்டியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Madakupati ,Sivagangai ,Madhagupatti ,Sivaganga ,Madakupatti ,Dinakaran ,
× RELATED சிவகங்கையில் கோடைகால கால்பந்து பயிற்சி நிறைவு விழா