×

கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அதிமுக ஆட்சியில் ரூ.136 கோடி வரை ஊழல்: அறப்போர் இயக்கம் தகவல்

சென்னை: அதிமுக ஆட்சியில் 6 ஆண்டுகளாக கூட்டுறவு சங்கங்கள் மூலமாக ரூ.136 கோடி வரை ஊழல் முறைகேடு செய்துள்ளதாக அறப்போர் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சி காலமான 2015 முதல் 2021ம் ஆண்டு வரை கூட்டுறவு சங்கங்கள் மட்டும் ரூ.136 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது. எனவே, அரசு விரைந்து கவனம் செலுத்தி, குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்க வேண்டும். அதேபோல, கூட்டுறவு சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் வாழ்நாள் தகுதி நீக்கம் செய்யவேண்டும். சங்கங்களின் செயலர்கள் மற்றும் கணக்காளர்கள் உட்பட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் மற்றும் இழப்பு தொகை மீட்க வேண்டும் என அரசுக்கு அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுக்கிறது.

கூட்டுறவு சங்கங்களில் நிதிமோசடி மற்றும் ஊழலை கண்டறிய தனி அறிக்கை பற்றிய தகவலை அறப்போர் இயக்கம் ஆர்.டி.ஐ மூலம் பெற்றது. அதன்படி, சுமார் 62 சதவீத கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் நிதிமுறைகேடு நடந்துள்ளது. குறிப்பாக 18 சதவீத கூட்டுறவு சங்கங்களில் ரூ.10 முதல் ரூ.50 லட்சம் வரையிலும் நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது என தெரியவந்துள்ளன. ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலின்படி, கடந்த 2015 முதல் 2021 வரை 1,068 கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே ரூ.138,29,89,204 முறைகேடு நடந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசுக்கு அறப்போர் இயக்கம் வைக்கும் கோரிக்கைகள்:
* சிறப்பு விரைவு விசாரணை குழு அமைத்து முறைகேட்டில் ஈடுபட்ட அந்தந்த சங்க பொறுப்பாளர்கள், சங்க நிர்வாக உறுப்பினர்களை வாழ்நாள் தடை செய்ய வேண்டும். அதேபோல, வாழ்நாள் தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியல் அனைத்து கூட்டுறவு சங்க வாயில்களில் ஒட்ட வேண்டும்.
* ஊழலில் ஈடுபட்ட சங்க பொறுப்பாளர்கள், செயலாளர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். மேலும், தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்படி பணி நீக்கம் செய்யவேண்டும்.
* அதேபோல, நிதி இழப்பை ஏற்படுத்திய நபர்களிடமிருந்து இழப்பு தொகை மீட்க வேண்டும்.
* கூட்டுறவு சங்க செயல்பாடுகளில் அனைத்து நிலைகளிலும் கணினி மயமாக்கப்பட வேண்டும்.
* கூட்டுறவு சங்கங்களின் தனி அறிக்கை மற்றும் அதன் மூலம் கொடுக்கப்பட்ட தண்டனை, மீட்கப்பட்ட நிதி என எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அனைவரும் அறியும் வண்ணம் பொது வெளியில் அறிவிக்க வேண்டும்.

ஆண்டு வாரியாக முறைகேடு தொகை விபரம்
நிதியாண்டு முறைகேடு தொகை சங்கங்களின் எண்ணிக்கை
2015-16 ரூ.11,15,85,180 39
2016-17 ரூ.19,19,19,437 62
2017-18 ரூ.28,13,88,631 223
2018-19 ரூ.36,68,40,766 348
2019-20 ரூ.35,27,10,496 319
2020-21 ரூ.5,85,44,693 77
மொத்தம் ரூ.136,29,89,204 1,068

The post கூட்டுறவு சங்கங்கள் மூலமாக அதிமுக ஆட்சியில் ரூ.136 கோடி வரை ஊழல்: அறப்போர் இயக்கம் தகவல் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Arappore ,CHENNAI ,Arampoor ,Dinakaran ,
× RELATED அடிப்படை விஷயம் கூட தெரியாத...