×

தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி தான் இறையன்பர்களின் பொற்காலம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்வதற்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணிகள் மற்றும் பெருந்திட்ட பணிகள் குறித்து வனத்துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:

திருத்தணி கோயிலுக்கு மாற்று மலைப் பாதை அமைப்பதற்கு வனத்துறைக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலம், 20 தனிநபர்களுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலம், கோயிலுக்கு சொந்தமான 2.10 ஏக்கர் நிலம் பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டு, அதற்குண்டான அனுமதி பெறுவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அறநிலையத்துறை வரலாற்றிலேயே குறுகிய காலத்தில் 758 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. கோயிலுக்கு சொந்தமான ரூ.4,719 கோடி மதிப்பீட்டிலான 4,961 ஏக்கர் நிலங்களும், 1,265 கிரவுண்டு மனைகளும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இந்து அறநிலைத்துறை உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து தற்போது வரை முதல்வர் வழிகாட்டுதலோடு நடைபெறுகின்ற திருப்பணிகள் போன்று எந்த காலத்திலும் நடைபெறவில்லை. இந்த ஆட்சி தான் இறையன்பர்களின் பொற்காலமாக திகழ்கிறது. புரசைவாக்கம், கங்காதீஸ்வரர் கோயில் குளத்திற்கு சுற்றுப்புற பகுதிகளில் பெய்யும் மழைநீர் சென்று சேரும் வகையிலான கட்டமைப்பு பணிகளில் 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

The post தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி தான் இறையன்பர்களின் பொற்காலம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,PK Shekharbabu ,Chennai ,PK Shekhar Babu ,Nungampakkam, Chennai ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...