×

இந்தியாவில் முதலீடு எலான் மஸ்க் அறிவிப்பு: ‘மோடியின் ரசிகன்’ என பேட்டி

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் கார் தயாரிப்பாளரும், டிவிட்டர் நிறுவன தலைவரும் டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க்கை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். பின்னர் மஸ்க் அளித்த பேட்டியில், ‘‘அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளேன். டெஸ்லா இந்தியாவில் முதலீடு செய்யும் என நம்புகிறேன். கூடிய விரைவில் அதை செய்வோம். நான் மோடியின் ரசிகன். அவர் உண்மையிலேயே இந்தியா மீது அக்கறை கொண்டுள்ளார். ‘பிற நாடுகளில் உள்ளூர் சட்டங்களுக்கு கீழ்படிவதைத் தவிர டிவிட்டருக்கு வேறு வழியில்லை. மீறினால் எங்கள் நிறுவனம் மூடப்படும் என்றார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘‘எலான் மஸ்க்கை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. ஆற்றல் முதல் ஆன்மீகம் வரையிலான பல்வேறு விஷயங்களை பேசினோம்’ என கூறி உள்ளார். இதற்கு பதிலளித்த மஸ்க், ‘பெருமை கொள்கிறேன் மீண்டும் சந்திப்போம். நரேந்திர மோடியுன் சிறந்த உரையாடல்’ என குறிப்பிட்டுள்ளார். மஸ்க் மட்டுமின்றி, அமெரிக்காவின் பொருளாதார நிபுணர் பால் ரோமர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களை பிரதமர் மோடி சந்தித்து இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி குறித்து பேசினார்.

* இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம்
பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி நேற்று அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்காவைப் போன்று இந்தியாவும் துடிப்பான ஜனநாயக நாடு. நாங்கள் இருதரப்பு உறவில் தொடர்ந்து இணைந்து பணியாற்ற விரும்புகிறோம்’’ என்றார்.

The post இந்தியாவில் முதலீடு எலான் மஸ்க் அறிவிப்பு: ‘மோடியின் ரசிகன்’ என பேட்டி appeared first on Dinakaran.

Tags : Elan Musk ,India ,Modi ,Elan Masque ,Twitter ,Tesla ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...