×

இந்தியரை திருமணம் செய்து கொண்ட ஜெர்மன் பெண் ‘புட் ஓவர் பிரிட்ஜில்’ ஆட்டம்

ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஜூலி சர்மா என்ற பெண், கடந்த ஆண்டுகளுக்கு முன் இந்தியர் ஒருவரை மணந்தார். தற்போது அவர், கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இந்தியாவில் வசித்து வருகிறார். அவ்வப்போது நடன வீடியோக்கள் வெளியிடும் ஜூலி சர்மா, சில பொழுதுபோக்கு வீடியோக்களையும் வௌியிடுவார். அந்த வகையில் ஃபுட் ஓவர் பிரிட்ஜின் மீது, பாலிவுட் நடிகர் விக்கி கவுசல் மற்றும் நடிகை சாரா அலிகான் நடித்த படத்தின் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டார்.

பிரபலமான பாடலுக்கு ஏற்றபடி ஜூலி சர்மா நடனமாடிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு கமெண்டுகளும் வருகிறது. அதில் ஒருவர், ‘பொது இடத்தில் இவ்வாறு ஆட்டம் போடுவதற்கு நிறைய தைரியம் தேவை, எல்லோரும் அதை செய்ய முடியாது. உங்களுக்கு ஹாட்ஸ் ஆப்’ என்றும், மற்ெறாருவர் தனது பதிவில், ‘நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள்’ என்றும் பதிவிட்டுள்ளார்.

The post இந்தியரை திருமணம் செய்து கொண்ட ஜெர்மன் பெண் ‘புட் ஓவர் பிரிட்ஜில்’ ஆட்டம் appeared first on Dinakaran.

Tags : Atom ,Over ,Julie Sharma ,
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது