×

பாவூர்சத்திரம் அருகே மலையிலிருந்து தப்பி வந்த மான் நாய்கள் கடித்து குதறி சாவு

பாவூர்சத்திரம்: பாவூர்சத்திரம் அருகே குறும்பலாப்பேரியை அடுத்த கைபொத்த மலையில் ஏராளமான மான்கள் உள்ளன. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்தும், வெயில் குறையாததால் தண்ணீரைத் தேடி இன்று அதிகாலை 5.30 மணி அளவில் ஒன்றரை வயது பெண் மான் ஒன்று, பாவூர்சத்திரம் அரசு மருத்துவமனை முன்பு வந்து நின்றது. அப்போது தெரு நாய்கள் அந்த மானை விரட்டி கடித்துக் குதறியது. இதில் பயந்தோடிய அந்த மான், அங்கு நின்ற ஆம்புலன்சுக்குள் புகுந்தது. அப்போது அங்கு நின்ற பொதுமக்கள், மானை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கடையநல்லூர் வனச்சரக வனவர் முருகேசன், ஆய்க்குடி வனக் காப்பாளர் பெருமாள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது மான் உயிரிழந்திருந்தது. அதன்பின்னர் பாவூர்சத்திரம் கால்நடை மருத்துவமனைக்கு அந்த மானை கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் அதை வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.

The post பாவூர்சத்திரம் அருகே மலையிலிருந்து தப்பி வந்த மான் நாய்கள் கடித்து குதறி சாவு appeared first on Dinakaran.

Tags : Bhavoorchatram ,Kaipotta Hill ,Kurumpalapperi ,Agni Nakshatra ,Dinakaran ,
× RELATED ஆலங்குளத்தில் இடி, மின்னலுடன் கூடிய பெய்த பலத்த மழையால் மக்கள் மகிழ்ச்சி!