×

2015 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136கோடி ஊழல்: நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் கோரிக்கை

சென்னை: 2015 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136கோடி ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் புகார் தெரிவித்துள்ளது. ஆர்.டி.ஐ, மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில் கூட்டுறவு, நிதித்துறை அமைச்சர்கள், மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த கூட்டுறவு சங்க ஊழல் குறித்து சிறப்பு விசரணைக் குழு அமைத்து விசாரிக்கக் கோரிக்கை அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதிகபட்சமாக வடக்கு சென்னையில் உள்ள பேலஸ் கூட்டுறவு சங்கத்தில் மட்டும் ரூ.8 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் 62% கூட்டுறவு சங்கங்களில் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிதி முறைகேடு நடந்திருப்பதாகவும், 18% கூட்டுறவு சங்கங்களில் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை நிதி முறைகேடு நடந்துள்ளதாகவும் மனுவில் குற்றம்சட்டபட்டுள்ளது.

கூட்டுறவுத்துறை தணிக்கை அறிக்கை அடிப்படையில் 1,068 கூட்டுறவு சங்கங்களில் முறைகேடு நடந்தது தெரியவந்துள்ளதாக அறப்போர் இயக்கம் கூறியுள்ளது. 2015-16-ம் நிதியாண்டில் மட்டும் 39 கூட்டுறவு சங்கங்களில் சுமார் ரூ.11கோடி முறைகேடு நடந்துள்ளதாகவும், 2016-17-ல் 62 கூட்டுறவு சங்கங்களில் சுமார் ரூ.19கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், எடப்படி பழனிசாமி முதலமைச்சாரக பதவியேற்ற பின்2017-18-ல் 223 கூட்டுறவு சங்கங்களில் ரூ.28 கோடியும், 2018-19-ல் 348 கூட்டுறவு சங்கங்களில் சுமார் ரூ.37 கோடியும், 2019-20-ல் 319 கூட்டுறவு சங்கங்களில் சுமார் ரூ.35 கோடியும் முறைகேடு நடந்துள்ளதாக ஆர்.டி.ஐ.யில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.

22 கூட்டுறவு சங்கங்களில் மட்டும் தலா ரூ.1 கோடிக்கும் மேல் முறைகேடு ந்டந்துள்ளதாகவும் அதன் மொத்த மதிப்பு ரூ.42 கோடி என்றும் புகார் தெரிவிக்கபட்டுள்ளது.

The post 2015 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் ரூ.136கோடி ஊழல்: நடவடிக்கை எடுக்க அறப்போர் இயக்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,crusaders ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…