×

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கரும்பு தோட்டத்தில் களையெடுப்பு மும்முரம்

திருக்காட்டுப்பள்ளி : இளங்காட்டுப் படுகை பகுதியில் பொங்கல் கரும்புக்கு களையெடுக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது.தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காட்டுப் படுகை (பூண்டி) பகுதியில் தற்போது முன்பட்ட குருவை சாகுபடி செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில், இப்பகுதியில் பொங்கல் கரும்பும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். பூண்டி விவசாயி சந்திரசேகர் தனது வயலில் 180 குழி பரப்பளவில் 10 ஆயிரம் விதைக் கரும்பு நடப்பட்டு இரண்டு மாதமாகிறது, முதல் களை எடுப்பதாகவும் இதுவரை முதல் பார் அமைத்து உள்ளதாகவும், ஒவ்வொரு முறையும் பார்களை மூன்று விதமாக பிரித்து, அதன் பிறகு தென்படும் களைகளை சிறிய மண்வெட்டியால் வெட்டியெடுத்து உரம் வைக்கும் பணி நடைபெறும்.

நான்கு நாளைக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் நன்கு வளர்ந்து வரும் கரும்பில் அவ்வப்போது ஒன்வொரு கனுக்களிலும் உள்ள தேவையற்ற தோகைகளை அகற்ற ரேண்டும் அவ்வாறு செல்வதால் கரும்பு நன்கு தடிமனுடன் வளர்ந்து வரும் என்று கூறினார்.மழை பெய்தால் தண்ணீர் பாய்ச்சும் முறையும் குறையும், இதற்கு ஒன்றறை லட்சம் ரூபாய் செலவாகும் என்றும் 10 மாதம் சென்று பொங்கல் சமயத்தில் வெட்டி விற்பனைக்கு அனுப்புவோம் என்று கூறினார்.

The post திருக்காட்டுப்பள்ளி பகுதியில் கரும்பு தோட்டத்தில் களையெடுப்பு மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Thirukkattupalli ,Ilangatupalli ,Ilangattupalli ,Thanjai district ,
× RELATED திருக்காட்டுப்பள்ளி முருகன் கோயிலில் வாகன மண்டபம் திறப்பு