×

உத்தரகாண்டில் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி 11 மலையேற்ற வீரர்கள் பலி : உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு!!

டெஹ்ராடூன் : உத்தரகாண்டில் 5 நாட்களுக்கு முன்பு காணாமல் போன மலையேற்ற வீரர்களில் 12 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.உத்தரகாண்டின் உத்தரகாசியில் உள்ள ஹர்சிலில் இருந்து ஹிமாச்சல பிரதேசத்தின் சிட்க்குள் வரை மலையேற்றம் செய்ய 11 பேர் அடங்கிய குழு புறப்பட்டன. இதே போன்று லம்ககா இருந்து 11 பேர் கொண்ட குழு மலையேற்றம் சென்றன. அம்மாநிலத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் கடந்த 18ம் தேதி 2 குழுவினரும் காணாமல் போயினர். அவர்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் விமானம் மூலம் ஈடுபட்ட நிலையில், மொத்தம் 12 மலையேற்ற வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே அம்மாநிலத்தில் கடும் வெள்ளபெருக்கில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கனமழை மற்றும் நிலச்சரிவால் 7000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் கூறியுள்ளார்.     …

The post உத்தரகாண்டில் கடுமையான பனிப்பொழிவில் சிக்கி 11 மலையேற்ற வீரர்கள் பலி : உயிரிழந்தோர் எண்ணிக்கை 68 ஆக உயர்வு!! appeared first on Dinakaran.

Tags : Utattarkhand ,Dehradun ,Utterkhand ,Uttharkasi ,Utar Kandra ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...