×

புதுச்சேரியில் ரூ.50 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை விற்ற சார் பதிவாளர் உட்பட 12 பேர் கைது: சிபிசிஐடி போலீஸ் விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரியில் கோயில் நிலத்தை போலி பாத்திரம் தயாரித்து விற்பனை செய்ய உதவிய சார் பதிவாளரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள பாரதி வீதியில் காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புடைய 64,000 சதுர அடி நிலம் உள்ளது. அந்த நிலத்தை கடந்த 2021-ம் ஆண்டு போலி ஆவணம் தயாரித்து மனைகளாக பிரித்து சிலர் விற்பனை செய்துள்ளனர்.

இது குறித்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் கோயில் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்ற புதுச்சேரி முன்னாள் வி.ஏ.ஓ. உட்பட 12 பேரை கைது செய்தனர். சரிவர ஆய்வு செய்யாமல் போலி உயில் தயாரித்து விற்பனை செய்ய உதவியதாக சார் பதிவாளருக்கு கைதானார். புதுச்சேரி காமாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்திற்கு 1995-ம் ஆண்டு உயில் என போலி ஆவணம் தயாரித்து 2021-ம் ஆண்டில் பதிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டம் கடந்த 1993-ம் ஆண்டு விழுப்புரம் ராமசாமி படையாட்சி மாவட்டம், கடலூர் வள்ளலார் மாவட்டம் என பிரிக்கப்பட்டது.

அதன் பின்னர், அவை 1997-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல் பாண்டிச்சேரி என்ற பெயர் 2006-ம் ஆண்டு புதுச்சேரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆனால், 1995-ம் ஆண்டு எழுதியதாக கூறப்பட்ட போலி உயில் புதுச்சேரி எனவும், விழுப்புரம் மாவட்டம், கடலூர் மாவட்டம் என எழுதி பத்திர பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின் மூலமே சார் பதிவாளர் கைது செய்யப்பட்டார்.

The post புதுச்சேரியில் ரூ.50 கோடி மதிப்புள்ள கோயில் நிலத்தை விற்ற சார் பதிவாளர் உட்பட 12 பேர் கைது: சிபிசிஐடி போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Sar Registrar ,Puducherry ,CBCID ,CPCIT police ,CPCID Police ,Dinakaran ,
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி