×

அர்ஜென்டினாவில் புகழ்பெற்ற தேசிய கிரில் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டி: இறைச்சித் துண்டுகளை வகை வகையாக சமைத்து அசத்தல்

அர்ஜென்டினா: அர்ஜென்டினாவில் புகழ்பெற்ற தேசிய கிரில் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டி காரசாரமாக நடைபெற்றது. அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்ஸ்யில் 5வது ஆண்டாக சமையல் கலைஞர்களை கவுரவிக்கும் விதத்தில் தேசிய கிரில் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இதில் போட்டியாளர்கள் 24 பேருக்கும் ஒரே அளவில் மாடு, ஆடு, மீன், பன்றி ஆகியவைகளின் இறைச்சிகள் மற்றும் தேவையான காய்கறிகள் வழங்கப்பட்டன. அவற்றை கொண்டு வித விதமாக கிரில், பார்பி கியூ வகைகளில் இறைச்சி உணவுகளை சமைத்த போட்டியாளர்கள் பார்வையாளர்களின் நாக்கில் எச்சில் ஊறவைத்தனர்.

நடுவர்கள் மற்றும் பொது மக்களின் வாக்குகள் அடிப்படையில் ஜெர்மன் கபிலரோ என்பவர் 2023ம் ஆண்டிற்கான கிரில் மாஸ்டர் சாம்பியன்ஷிப்பை தட்டி சென்றார். இப்போட்டி கலாச்சார திருவிழாவாக ஒருங்கிணைக்க பட்ட நிலையில் உணவு விற்பனை, இசை கச்சேரிகள், பொழுது போக்கு அம்சங்கள் என பியூனஸ் அயர்ஸ் நகரம் விழா கோலம் பூண்டது.

The post அர்ஜென்டினாவில் புகழ்பெற்ற தேசிய கிரில் மாஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டி: இறைச்சித் துண்டுகளை வகை வகையாக சமைத்து அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Argentina ,National Grill Master Championship ,Buenos Aires ,Argentina… ,
× RELATED அர்ஜெண்டினாவில் காலி பெட்டி மீது ரயில் மோதி 90 பயணிகள் காயம்