×

பார்வையற்றோருக்கான அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை

தர்மபுரி, ஜூன் 21:தர்மபுரி பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 2023-24ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு தொடக்க பள்ளியானது தர்மபுரி செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைபள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியானது 1 முதல் 5 வகுப்பு வரை ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கி பயிலும் வகையில் தனித்தனி விடுதி வசதியுடன் கூடிய பள்ளியாகும். இப்பள்ளியில், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கல்வி பயின்ற ஆசிரியர்களால் கல்வி கற்பிக்கப்படுகிறது.

இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விடுதியில் 3 வேளையும் சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும் இலவச சீருடை, சிறப்பு கல்வி உபகரணங்கள், இலவச பேருந்து சலுகை, கல்வி உதவித்தெகை போன்ற அரசு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. மேலும் தொடர்புக்கு தலைமையாசிரியர் (பொ), அரசு பார்வைத்திறன் குறையுடையோருக்கான பள்ளி, இலக்கியம்பட்டி, தர்மபுரி என்ற முகவரியிலும், 7373773486, 043432-232418 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தள்ளார்.

The post பார்வையற்றோருக்கான அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Tags : Government School for the Blind ,Dharmapuri ,Dharmapuri Government Primary School for the Blind ,school for the blind ,Dinakaran ,
× RELATED தருமபுரி மாவட்டம் சவுளுகொட்டாய்...