×

பஸ்சில் மீண்டும் மீண்டும் ஆபாசம் பெருசுக்கு இளம்பெண் செருப்படி

கோவையை சேர்ந்த இளம்பெண் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் வேலை முடிந்து கோவை பஸ்சில் ஏறினார். அப்போது பக்கத்து இருக்கையில் இருந்த 50 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவர் திடீரென பெண்ணிடம் ஆபாசமாக சைகை காட்டியுள்ளார். இதனை பார்த்த இளம்பெண் முகத்தை சுளித்துக்கொண்டு வேறு பக்கம் திரும்பினார். ஆனால் அந்த நபர் மீண்டும் வேறு கோணத்தில் நின்று ஆபாசமாக நடந்தார். இதனையடுத்து அந்த பெண் எச்சரிக்கை விடுத்தார். இதனை பொருட்படுத்ததாத அந்த நபர் மீண்டும் மீண்டும் தொல்லை கொடுத்தார். இதனால் பொறுமை இழந்த இளம்பெண் சத்தம் போட்டார். உஷாரான அந்த நபர் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்.

ஆனால் பஸ்சில் இருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கிய இளம்பெண் அந்த நபரிடம், ‘‘நான் உன் பேத்தி வயதுதான் இருப்பேன். உனக்கு மனைவி, மகள் இருப்பார்கள். போனை கொடு. நான் அவர்களிடம் இது குறித்து தெரிவிக்கிறேன்’’ என்று கேட்டார். போனை தர அந்த நபர் மறுத்தார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் செருப்பை கழற்றி அந்த நபரை சரமாரியாக தாக்கினார். சில வாலிபர்களும் அவரை தாக்கினர். போலீஸ் விசாரணையில் அவர் பெயர் லாரன்ஸ் (50) என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளம்பெண்ணின் துணிச்சலை நேரில் பார்த்தவர்களும், சமூக வலைதளத்தில் பார்த்தவர்களும் பாராட்டி வருகிறார்கள்.

தாசில்தாரிடம் மன்னிப்பு: ஓடும் பஸ்சில் ஆபாசமாக நடந்துகொண்ட லாரன்ஸ் மீது சம்பந்தப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளிக்க மறுத்துவிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை மேட்டுப்பாளையம் தாசில்தார் சந்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். வட்டாட்சியர் முன்னிலையில் இனிமேல் குற்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என லாரன்ஸிடம் உத்தரவாத கடிதம் பெற்று அவரை காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

The post பஸ்சில் மீண்டும் மீண்டும் ஆபாசம் பெருசுக்கு இளம்பெண் செருப்படி appeared first on Dinakaran.

Tags : Goa ,Mattupalaya ,
× RELATED கோவையில் தனியார் மருத்துவமனைக்குள்...