×

சூதாடிய மேற்கு வங்கத்தினர் 8 பேர் கைது

 

ஈரோடு, ஜூன் 21: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்துள்ள பனிக்கம்பாளையத்தில் சூதாட்டம் நடப்பதாக பெருந்துறை போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தியதில், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுகுமார் சர்தார் (24), பிரோ சென்ஸித்சா (24), அருண் காயல் (26), சானு ஹால்டர் (28), சாந்தனுகுமார் (26), நித்யானந்தா மோன்டல் (32), சுகுமார் (25), மந்தும் சர்தார் (30) ஆகிய 8 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் பனிக்கம்பாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், அவ்வப்போது இது போன்ற சூதாட்டத்தில் ஈடுபடுவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

The post சூதாடிய மேற்கு வங்கத்தினர் 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : West ,Bengal ,Erode ,Erode District ,Perundurai ,Panikampalayam ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்கள் மீது வழக்கு..!!