×

கவர்னரை திரும்ப பெறக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்

சாத்தூர், ஜூன் 21: சாத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு விருதுநகர் மேற்கு மாவட்ட மதிமுக சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற குடியரசு தலைவரை வலியுறுத்தி, கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். கையெழுத்து இயக்கத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். சாத்தூர் நகர செயலாளர் மற்றும் நகர் மன்ற உறுப்பினர் கணேஷ்குமார், ஒன்றிய செயலாளர் ராஜ் மோகன், மாவட்ட இணை செயலாளர் பரசுராமன், மாவட்ட அவைத்தலைவர் சுரேந்திரன் மற்றும் மதிமுக நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அருப்புக்கோட்டையில் நடந்த கையெழுத்து இயக்கத்திற்கு மதிமுக மாவட்ட அவைத்தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மதிமுக மாவட்ட செயலாளர் கண்ணன் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், கனகராஜ், மாவட்ட பொருளாளர் தங்கவேல் மாவட்ட துணைச்செயலாளர்கள் மணிவண்ணன், நாகராஜன், கிருஷ்ணமூர்த்தி, வாசுகி, நகர மதிமுக செயலாளர் தாமோதரன், ஒன்றிய செயலாளர் திருமூர்த்தி, காரியாபட்டி ஒன்றிய செயலாளர் சாமிகண்ணு, திருச்சுழி ஒன்றிய செயலாளர் மதன், நரிக்குடி ஒன்றிய செயலாளர் கர்ணன், விருதுநகர் ஒன்றிய செயலாளர்கள் அபிராம், சேதுபதி உட்பட மதிமுகவினர் கலந்துகொண்டனர்.

The post கவர்னரை திரும்ப பெறக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Madhyamik ,Chatur ,Virudhunagar West District ,Madhyamuk ,Tamil Nadu ,Governor RN ,Ravi ,
× RELATED மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு...