×

மழைக்கு கான்கிரீட் வீடு இடிந்து சேதம்

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த டி.பெருமாபாளையம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் சித்தேஷ் (50). மாற்றுத்திறனாளி. இவர் வசித்து வந்த பழமையான கான்கிரீட் வீடு நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு இடிந்து விழுந்தது. அப்போது, சித்தேஷ் மற்றும் அவரது மனைவி சித்ரா, மகன் ஆகியோர் வெளியே படுத்திருந்ததால், காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து தகவலறிந்த, ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், மழையால் இடிந்த வீட்டை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

The post மழைக்கு கான்கிரீட் வீடு இடிந்து சேதம் appeared first on Dinakaran.

Tags : Ayodhyapatnam ,Siddesh ,D.Perumapalayam MGR Nagar ,Dinakaran ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு