×

16 மாவட்ட இளைஞர்களுக்கு ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முகாம் என்ஐஏ தேடப்படும் நபரின் தந்தை இறப்பு குற்றவாளி வருவார் எனக்கருதி ஏராளமான போலீசார் குவிப்பு

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, அய்யம்பேட்டை அருகே வடக்கு மாங்குடி பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தவர் முகமது பாரூக் (70). இவர் உடல்நல குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான வடக்கு மாங்குடிக்கு எடுத்து வந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் இவரது மகன் புர்கானுதீன் (32) என்பவர் கடந்த 2019ம் ஆண்டு திருபுவனம் பகுதியில் மதமாற்றத்தை தட்டி கேட்டதால் பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேசிய புலனாய்வு முகமையால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளார். இவரது தந்தை இறப்பிற்கு புர்கானுதீன் வருவதற்கான சூழ்நிலை இருப்பதால் வடக்கு மாங்குடியில் பாபநாசம் டிஎஸ்பி பூரணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். அவரது உடல் அடக்கம் செய்யப்படும் வரை குற்றவாளி வராததால் போலீசார் அங்கிருந்து திரும்பி சென்றனர். குற்றவாளி கைதுக்காக போலீசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

The post 16 மாவட்ட இளைஞர்களுக்கு ராணுவத்தில் ஆள் சேர்ப்பு முகாம் என்ஐஏ தேடப்படும் நபரின் தந்தை இறப்பு குற்றவாளி வருவார் எனக்கருதி ஏராளமான போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Army ,districts ,NIA ,Kumbakonam ,Mohammad Farooq ,North Mangudi Pallivasal Street ,Ayyampet, Thanjavur District ,Papanasam Taluk ,16 District ,camp ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ