×

ஆலங்குடி பகுதியில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழை வயலோகம், மறமடக்கியில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் கந்தர்வகோட்டையில் நடந்த ஜமாபந்தி குடிகள் மாநாட்டில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டையில் நடந்த ஜமாபந்தி குடிகள் மாநாட்டில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை எம்எல்ஏ சின்னதுரை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகத்தில் கடந்த 15ம் தேதி புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் 1432ம் பசலிக்கான ஜமாபந்தி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. ஜமாபந்தி முடிந்த நிலையில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் குடிகள் மாநாடு நடைபெற்றது. இதில் இலவச வீட்டு மனை பட்டா 15 நபர்களுக்கும், இனைய வழிபட்டா 62 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஏழு நபர்களுக்கும், கைம்பெண் உதவி தொகை இரண்டு நபர்களுக்கும், முதியோர் உதவித்தொகை ஒருவருக்கும் வழங்கினார். குடிகள் மாநாட்டில் பொதுமக்கள் பேசிய போது கந்தர்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில், சிவன் கோவில், ராமர் கோவில்கள் தெருவின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் பக்தர்கள் பயன் பெரும் வகையில் உடனடியாக கோவில் அருகில் பொதுக்கழிப்பறை கட்டித்தர வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பயன்பெறும் வகையில் காட்டு நாவல்- கொத்தகம் இணைப்பு சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கந்தர்வகோட்டை கவுன்சிலர் ராஜேந்திரன் கேட்டுக்கொண்டார். இதற்கு பதில் அளித்து பேசிய எம்எல்ஏ சின்னதுரை, நியாயமான கோரிக்கைகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை தாசில்தார் காமராஜ், துணை தாசில்தார்கள் பால்பாண்டி, பாலகிருஷ்ணன், கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post ஆலங்குடி பகுதியில் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த மழை வயலோகம், மறமடக்கியில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் கந்தர்வகோட்டையில் நடந்த ஜமாபந்தி குடிகள் மாநாட்டில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா appeared first on Dinakaran.

Tags : Alangudi ,pannoku ,Maramataki ,Jamabandhi residents' conference ,Kandarvakottai ,Gandharvakottai ,MLA ,Chinnadurai ,Jamabandhi residents' ,Pudukottai ,Jamabandhi residents conference ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபட்ட எஸ்எஸ்ஐ,...