×

ராயல் இன்டர்நேசனல் பள்ளி மாணவர்கள் சாதனை

குமாரபாளையம்: நீட் மருத்துவ நுழைவுத்தேர்வில் குமாரபாளையம் ராயல் இன்டர்நேசனல் பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவி மலர்விழி நீட் தேர்வில் 586 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தார். இவர் ஜேஇஇ தேர்வில் 95.54 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளார். இப்பள்ளியின் 5 மாணவ, மாணவிகள் ஜேஇஇ., தேர்வில் 90 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர். நீட், ஜேஇஇ தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளர் அன்பழகன், செயலாளர் முருகேசன், பொருளாளர் கவிதா ஆனந்த், முதல்வர் அனிதா ஆன்ட்ரு, அகாடமிக் டைரக்டர் விஜய் கார்த்திக் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

The post ராயல் இன்டர்நேசனல் பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : Royal International School ,Kumarapalayam ,Malarvizhi ,Dinakaran ,
× RELATED தீயணைப்பு நிலையம் கட்ட இடம் தேர்வு