×

16 மாவட்ட இளைஞர்களுக்கு ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் மணல்மேடு கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சர் காந்தி ஆய்வு

மயிலாடுதுறை: மணல்மேடு கூட்டுறவு நூற்பாலை இயங்கிய இடத்தில் கலைஞர் பெயரில் கைத்தறி நெசவு தொழிற்சாலை, சூரிய ஒளி மின் உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை ஆலை துவங்க கோரிக்கை விடுக்கப்படதன் பேரில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி, துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் 42 ஏக்கரில் 1965ம் ஆண்டு முதல் இயங்கிவந்த நூற்பாலை 2003ம் ஆண்டு நஷ்டம் காரணமாக மூடப்பட்டது. ஆலை இயங்கி வந்த இடத்தில் கலைஞர் பெயரில் கைத்தறி நெசவு தொழிற்சாலை, சூரியஒளி மின் உற்பத்தி மற்றும் ஆயத்த ஆடை ஆலை துவங்க மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து மணல்மேடு நூற்பாலை இயங்கிய இடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, துறை அதிகாரிகளுடன் வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், கைத்தறி, கைத்திறன், நுணிநூல் மற்றும் கதர்த்துறையின் அரசு முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆணையர் விவேகானந்தன், கலெக்டர் மகாபாரதி, எம்பி ராமலிங்கம், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம், மணல்மேடு பேரூராட்சி தலைவர் கண்மணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் 18 கூட்டுறவு நூற்பாலைகள் இயங்கி வந்தன. தற்போது 6 நூற்பாலைகள் மட்டுமே இயங்கி வருகிறது. ஒவ்வொரு தொழிற்சாலையும் 50 ஏக்கர் மிகாமல் இருக்கின்றது. மணல்மேட்டிலுள்ள இந்த கூட்டுறவு நூற்பாலை 2003ம் ஆண்டு நிர்வாக காரணங்களால் மூடப்பட்டது. இத்தொழிற்சாலையின் மொத்தப் பரப்பளவு 40 ஏக்கர் ஆகும். இதில் 5.86 ஏக்கர் அரசு கல்லூரி அமைக்க வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 34.09 ஏக்கரில் 4 ஏக்கரில் சேதமடைந்த கட்டிடங்கள் உள்ளது. இந்த தொழிற்சாலையில் இயக்கத்திற்கு மின் கட்டணசெலவை குறைக்கும் நோக்கில் சூரிய மின் தகடுகள் பொருத்தி செயல்படவும், ஆயத்த ஆடை பூங்கா, கைத்தறி பூங்கா மற்றும் சிறிய அளவில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து மீண்டும் புதுப்பித்து இயக்கினால் இங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது மட்டுமல்லாமல் இப்பகுதி பருத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்ய ஏதுவாக இருக்கும் என்ற எண்ணத்தில் இப்பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் எனக்கு கோரிக்கை வைத்தனர்.

The post 16 மாவட்ட இளைஞர்களுக்கு ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் மணல்மேடு கூட்டுறவு நூற்பாலையில் அமைச்சர் காந்தி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister ,Gandhi ,Sandalmedu Cooperative Spinning Camp ,Mayiladuthurai ,Sandalmedu Cooperative Spinning Mill ,Dinakaran ,
× RELATED குழந்தை மாதிரி மோடி அழுகிறார்: பிரியங்காகாந்தி சாடல்