×

திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 677 மனுக்கள் ஏற்பு

திருத்தணி: திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு பெற்றது. திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் கடந்த, 6ம் தேதி முதல் நேற்று வரை மொத்தம், 9 நாட்கள் நடப்பாண்டிற்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில், ஜமாபந்தி அலுவலரும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியருமான தீபா பங்கேற்றார். ஜமாபந்தியில் மொத்தம், 74 வருவாய் கிராமங்களில் இருந்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். இதில், பட்டா மாற்றம் 336, இலவச வீட்டுமனை பட்டா 194, முதியோர் உதவித்தொகை 47, ரேஷன்கார்டு 3, கணினி பட்டா மேல்முறையீடு 2, ஊரக வளர்ச்சித்துறை 9, இதர துறைசார்ந்த மனுக்கள் 73 என மொத்தம், 677 மனுக்கள் ஏற்கப்பட்டது.

இதில், 35 பயனாளிகளுக்கு அரசு நலதிட்ட உதவிகள் பெறுவதற்கு ஆணை வழங்கப்பட்டது. மீதமுள்ள சம்மந்தப்பட்டத்துறை அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து, தகுதியான பயனாளிகளுக்கு வரும், 26ம் தேதி நலதிட்ட உதவிகள் தாசில்தார் அலுவலகத்தில் வழங்கயிருப்பதாக திருத்தணி தாசில்தார் உமா (பொ) தெரிவித்தார். இந்நிலையில், நேற்று நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் துணை தாசில்தார்கள் சந்திரசேகர், ரீட்டா, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

The post திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 677 மனுக்கள் ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Tiruthani Tahsildar Office ,Thiruthani ,Tahsildar ,Thiruthani Tahsildar ,
× RELATED தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவ படையினருக்கு திருத்தணி போலீசார் விருந்து