×

ரூ.16 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தம்பதியர் மீது வழக்கு பதிவு

திருத்தணி, ஜூன் 21: கடனை திருப்பிக்கேட்டதால் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி மனைவி ராமபிரபாவதி (43). இவர், திருத்தணி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த சுந்தர் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோருக்கு ஜனவரி மாதம் 18ம் தேதி 2018ம் ஆண்டு கடனாக, ரூ.16 லட்சம் கொடுத்துள்ளார். பல மாதங்கள் ஆகியும் தம்பதியர் பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் ராமபிரபாவதி, பலமுறை அந்த தம்பதியிடம் கேட்டும் பணத்தை கொடுக்காமல் அவர்கள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் சுந்தர், மொபைல் மூலம் ராமபிரபாவதியை தொடர்புகொண்டு வீட்டிற்கு வாருங்கள் உங்கள் பணத்தை தருகிறேன் என கூறி ராமபிரபாவதியை அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு அழைத்துள்ளார். பின், ராமபிரபாவதியிடம், எங்களால் தற்போதைக்கு பணம் தரமுடியாது, பணம் வரும்போதுதான் வாங்கிக் கொள்ள வேண்டும், அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து ராமபிரபாவதி கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீசார் சுந்தர், கீதா ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post ரூ.16 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தம்பதியர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Dinakaran ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...