×

தாயை படுகொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மகன் கைது

வேளச்சேரி: தாயை படுகொலை செய்த வழக்கில், தலைமறைவாக இருந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். வேளச்சேரி, நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (48). இவரது மகன் மூர்த்தி (33). இவர் குடிபோதைக்கு அடிமையானவர். கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19ம் தேதி இரவு, லட்சுமியிடம் குடிக்க பணம் கேட்டு மூர்த்தி தகராறில் ஈடுபட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி, தாய் லட்சுமியை கத்தியால் சரமாரியாக குத்தி படுகொலை செய்தார். இதையடுத்து வேளச்சேரி போலீசார், வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், அவர் நீதிமன்ற பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர், வழக்கு சம்மந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். இதையடுத்து, கடந்த 2021ம் ஆண்டு, நவம்பர் மாதம், 22ம் தேதி தலைமறைவான மூர்த்தியை கைது செய்ய, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன்பேரில், போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் பெரும்பாக்கத்தில் பதுங்கி இருந்த மூர்த்தியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர், அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post தாயை படுகொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Velachery ,Velachery, Nehru Nagar ,Dinakaran ,
× RELATED வேளச்சேரி ஏரியில் மழைநீர் கலப்பதற்கு...