×

அமெரிக்க அதிபர் பைடன் மகன் மீது குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன் வருமான வரி செலுத்தத் தவறியதாகவும், சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்ததாகவும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் பைடனின் இரண்டாவது மகன் ஹண்டர் பைடன். 2018 அக்டோபரில் போதைப்பொருள் வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டார். மேலும் அவர் போதைப்பொருள் பயன்படுத்துவது தெரிந்திருந்தும் கோல்ட் கோப்ரா 38 சிறப்பு வாய்ந்த கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டப்பட்டார். இந்தநிலையில் அவர் மீது மேலும் ஒரு குற்றம் சாட்டப்பட்டது. அவர் வருமானவரி முறையாக செலுத்தவில்லை என்றும் கூறப்பட்டது. இந்த வழக்குகள் மீது டெலாவேரில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அவரது வக்கீல் கிறிஸ்டோபர் கிளார்க் ஆஜர் ஆனார். இந்த வழக்கு குறித்து வெள்ளை மாளிகை உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

The post அமெரிக்க அதிபர் பைடன் மகன் மீது குற்றச்சாட்டு: நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : US ,Chancellor ,Bidon ,Washington ,Hunter Bidon ,U.S. ,Dinakaran ,
× RELATED சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது