×

திருவண்ணாமலையில் இருந்து தெலங்கானாவிற்கு வந்து நானே மகாவிஷ்ணு 2 மனைவிகளுடன் மக்களை ஏமாற்றிய போலி சாமியார்: போலீசார் எச்சரித்து அனுப்பினர்

திருமலை: மக்களின் குறைகளை போக்க திருவண்ணாமலையில் இருந்து தெலங்கானாவிற்கு வந்த ‘நானே மகாவிஷ்ணு’ எனக் கூறி மக்களை ஏமாற்றிய போலி சாமியாரை காவல் நிலையம் அழைத்துச்சென்று பின்னர் நிபந்தனைக்கு பிறகு போலீசார் எச்சரித்து விடுவித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவருக்கு இரண்டு மனைவிகளும், ஒரு மகனும் உள்ளனர். சந்தோஷ் தன்னை மகா விஷ்ணுவாகவும், தனது மனைவிகளை தேவி, பூதேவி எனவும் கூறிக் கொண்டு மக்களை காக்க மனித உருவில் வந்த கடவுள் என தன்னை சந்திக்க வருபவர்களிடம் கூறி வந்துள்ளார்.

மேலும் ஐந்து தலைகள் கொண்ட பாம்பு போன்று கட்டில் அமைத்து அதில் படுத்துக் கொண்டு தனது இரண்டு மனைவிகள் கால் அழுத்தி விடுவது போன்றும், திருப்பதி ஏழுமலையான் போன்று வேடம் அணிந்தும் நான் கடவுள் எனகூறி வந்துள்ளார். சுவாமிஜியின் மகிமையால் வாய் பேச முடியாத பலர் பேசவும், நடக்க முடியாதவர்கள் நடக்கவும் முடிந்தது என சுற்றுவட்டார கிராம மக்களிடையே தகவல் பரப்பப்பட்டு கூட்டம் கூட்டியுள்ளார். இதனால் சந்தோஷ் சுவாமியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை அறிந்த கொடிதொட்டி எஸ்ஐ வெங்கடேஷ் உத்தரவின் பேரில், போலீசார் சந்தோஷ் சுவாமியை அங்கிருந்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பல்வேறு நிபந்தனைகளுடன் எச்சரித்து விடுவித்தனர்.

The post திருவண்ணாமலையில் இருந்து தெலங்கானாவிற்கு வந்து நானே மகாவிஷ்ணு 2 மனைவிகளுடன் மக்களை ஏமாற்றிய போலி சாமியார்: போலீசார் எச்சரித்து அனுப்பினர் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tiruvannamalai ,Nanae ,Maha Vishnu ,Tirumala ,Nane Mahavishnu ,Dinakaran ,
× RELATED மாடு குறுக்கே வந்ததால் 30 பயணிகளுடன் சென்ற பஸ் வீட்டின் மீது மோதி விபத்து