×

சென்னையில் திருடுபோன 2 வேன் பாளையில் மீட்பு: போலீசில் சிக்காமல் இருக்க டோல்கேட்களை கடக்காமல் மாற்று வழியில் தப்பியவர் கைது

தாம்பரம்: மேற்கு தாம்பரம் சிவராஜ் தெருவை சேர்ந்த பிரதீபனின் லோடு வேன் கடந்த டிசம்பர் 22ம் தேதியும், நந்தம்பாக்கத்தை சேர்ந்த டில்லிபாபுவின் டெம்போ டிராவலர் வேன் கடந்த 10ம் தேதி தாம்பரத்திலும் திருடுபோனது. இதுகுறித்து  தாம்பரம் காவல் நிலைத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில், தனிப்படை போலீசார், சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, திருடப்பட்ட வாகனங்கள் செங்கல்பட்டு நோக்கி சென்றது தெரியவந்தது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை உள்ள சிசிடிவி  கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, செங்கல்பட்டு டோல்கேட்டில் அந்த வாகனங்கள் செல்லாதது தெரியவந்தது.இதனால், செங்கல்பட்டு டோல்கேட் பகுதிக்கு முன்னே உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்துபோது, அந்த வாகனங்கள் டோல்கேட்டை சுற்றியுள்ள கிராமங்கள் வழியாக சென்று பின்னர் டோல்கேட்டை தாண்டியவுடன் மீண்டும்  ஜிஎஸ்டி சாலை வழியாக சென்றது தெரியவந்தது.  இதேபோல், சென்னையிலிருந்து பாளையங்கோட்டை வரை எந்த ஒரு டோல்கேட் வழியாகவும் அந்த வாகனங்கள் செல்லாமல் டோல்கேட் அருகே உள்ள கிராமங்கள் வழியாக  புகுந்து பாளையங்கோட்டை சென்றது தெரியவந்தது. இதையடுத்து,  தனிப்படை போலீசார் பாளையங்கோட்டை சென்று கண்காணித்தபோது, ரஹ்மத் நகர் பகுதியில் மேற்கண்ட 2 வாகனங்களும் இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றை திருடிய மரிய ஜோசப் சேவியரை (43) கைது செய்தனர்….

The post சென்னையில் திருடுபோன 2 வேன் பாளையில் மீட்பு: போலீசில் சிக்காமல் இருக்க டோல்கேட்களை கடக்காமல் மாற்று வழியில் தப்பியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tambaram ,Pradeepan ,Shivraj Street, ,West Tambaram ,Nantambakkam ,
× RELATED மின்சார ரயில்கள் ரத்தால்...