×

பெரியகுளம் அருகே நடந்த விபத்தில் பலியான வாலிபரின் தாயாருக்கு நஷ்டஈடு தராததால் அரசு பஸ் ஜப்தி

*நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை

பெரியகுளம் : பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் செந்தில்குமார் (32). திருமணமாகாத இவர் தேனியில் உள்ள தனியார் மில் ஒன்றில் பணி புரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு வேலைக்கு சென்ற அவர் மில்லில் இருந்து அரசு பஸ்ஸில் வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது, டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால் படிக்கட்டு வழியாக செந்தில்குமார் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

பின்னர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனைத் தொடர்ந்து இவரது தாயார் சசிகலா கடந்த 2020ம் ஆண்டு பெரியகுளம் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் மகனின் மரணத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து ரூ.4 லட்சத்து 65 ஆயிரத்தை மனு தாக்கல் செய்த நாள் முதல் உரிய வட்டியுடன் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் அரசு போக்குவரத்துக் கழகத்தினர் நஷ்டஈடு தொகை வழங்கவில்லை. இதனை தொடர்ந்து சசிகலா தரப்பில் நிறைவேறுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி கணேசன் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து பெரியகுளம் பஸ் நிலையத்திற்கு வந்த திருச்சி செல்லும் அரசு பஸ்சை கோர்ட் பணியாளர் ரமேஷ் ஜப்தி செய்தார். பின்னர் பஸ் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

The post பெரியகுளம் அருகே நடந்த விபத்தில் பலியான வாலிபரின் தாயாருக்கு நஷ்டஈடு தராததால் அரசு பஸ் ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Rajendran ,Vadugapatti ,Senthilkumar ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் அருகே காயத்துடன் கிடந்த...